Niet blij met je aankoop? Geeft niet! Je kunt artikelen tot 30 dagen retourneren
Met een cadeaubon zit je altijd goed. De ontvanger kan de cadeaubon voor alles uit ons assortiment inwisselen.
Tot 30 dagen retourrecht
நாட்டின் நரம்புகள்-இன்று ஏட்டிலே கண் செலுத்துபவர்கள் என்ற உண்மையை நல்லறிவாளர்கள் நவிலக் கேட்டோம். நாடு சுற்றியோர்- ஏடு படித்தோர் - பாடுபட்டோர் - இத்தனை பேரும் கேடு களைய தேர்ந்தெடுத்தப் படை, மாணவப் படை, மாணவப் படையின் மாண்புகள் குறித்து-பல்வேறு நாட்டின் சரித் திரங்கள்......படிப்போரையும் துடித்திடச் செய்யும் வகையில் தீட்டப்பட்டுள்ளன.
மாணவப் பருவமிருக்கிறதே-மாணவ நிலையல்ல- பருவத்தைக் குறிப்பிடுகிறேன் - முறுக்கேறிய பருவம் - குறிப்பிடுகிறேன்-முறுக்கேறிய முட்டவரும் காளையையும் மோதிக் கொல்லுகின்ற பருவம்- துணிவுமிக்க பருவம்-தொண்டு புரியும் உள்ளங் கொண்ட தூய்மைப் பருவம் இலட்சியப் பாதையிலே இடர் கண்டு சிரித்து - துன்பம் தொடர் கதையானால் அதையும் ரசித்து - எடுத்த காரியத்தை எப்படியும் நிறைவேற்ற ஆர்வ அலைகளால் மோதுண்டு வேங்கைப் புலியென சீறிச் செயலாற்றும் பருவம்
இத்தகைய ஈடு இணையற்ற இளமைப் பருவம்-இலட்சியத்துக்காக மட்டுமே தியாகம் செய்யப்பட்ட நாடுகள் பலப்பல. இன்ப விளையாட்டு-ரசமான கேளிக்கை-ரதிதேவிகளின் மந்தகாசமடி - இப்படி வாலிபத்தை வாரிச் செலவிடு
கின்றவர்களும் உண்டு.
இவர்களுக்கு நடுவேதான் நாட்டுக்காக வாழ்வை ஈந்துவிட்ட நல்லவர்களும் நடமாடுகிறார்கள். வீடு துறந்து - நாடு சென்று கமண்டலமேந்திகளாகத் திரியவேண்டுமென்பதல்ல;
Hoi! Ik ben Libroamiko, je boekadviseur.
Hoe kan ik je helpen?